Thursday 22 March 2012

கழுத்தின் கருமையை குறைய வேண்டுமா!

வெயில் காலங்களில் சிலருக்கு வெயிலில் அதிகம் அலைவதால், கழுத்து பாகம் கறுத்துப் போய்விடும். அப்படி இருப்பவர்கள் கோதுமை, பாசிப்பயறு, ஓட்ஸ் ஆகிய மூன்றின் மாவையும் பாலுடன் கலந்து கொள்ளுங்கள். இதை கழுத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் கழுத்தின் கருமை நிறம் குறையும்.

*முட்டைக் கோஸின் வெளிப்புற இலைகளை நறுக்கி மிக்சியில் இட்டு. அதன் சாற்றை எடுத்துக் கொள்ளுங்கள் அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் ஈஸ்ட், ஒரு ஸ்பூன் தேன் கலந்து கழுத்தில் தடவி வர சூரிய ஒளியினால் பாதிக்கப்பட்ட கறுமை நிறம் ஓரிரண்டு நாட்களில் மறைந்து போய்விடும்.
*ஒரு டீஸ்பூன் வெங்காயச் சாறு, சிறிது ரோஸ் வாட்டர், இரண்டு சொட்டு ஆலிவ் எண்ணெய், ஒரு ஸ்பூன் பயத்தம்மாவு இந்த நான்கையும் கலந்து கழுத்தில் பூசி 10 நிமிடங்கள் கழித்துக் கழுவினாலும் நாளடைவில் கழுத்தின் கறுப்பு நீங்கிவிடும்.
*இளநீரில் சிறிது சந்தனம் சேர்த்து கழுத்தில் தடவி வந்தால் வேர்க்குரு நீங்கும். நல்ல இதமாகவும் இருக்கும்.தர்பூசணிப் பழச்சாறுடன் பயத்தமாவைக் குழைத்து குளிர் சாதனப் பெட்டியில் வைக்கவும் அரை மணி நேரம் கழித்து, அந்த விழுதை எடுத்து கழுத்தில் தடவி வர, வெயிலில் வறண்ட சருமத்துக்கு புதுப்பொழிவு கிடைக்கும்.
*பெரிய “திக்”கான செயின் அணிவதாலும் ஃபேன்ஸி நகைகள் அணிவதாலும், சிலருக்கு கழுத்தின் பின் பகுதி அதிகமாகக் கறுத்துப் போயிருக்கும். அவர்கள் பாலில் 1 ஸ்பூன் தேன், 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கருமை உள்ள பகுதிகளில் தடவி, 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவேண்டும் சில வாரங்களிலேயே அந்தக் கருமை நீங்க இயல்பான நிறம் கிடைத்துவிடும்.
*நீங்களும் உங்க கழுத்தை அழகு படுத்துங்க.நீங்களும் கழுத்தழகி ஆகுங்க!

No comments:

Post a Comment